கம்பம்.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே வெட்டுக்காடு பகுதியில் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலையில் நாற்று நட்டு போராட்டத்தை வெளிப்படுத்தினர் மேலும் வெட்டுக்காடு, காஞ்சிமறைதுறை சுற்றுவட்டார பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர் இதில் கூடலூர் பகுதிக்கு வருவதற்கு முக்கிய சாலையான வெட்டுக்காடு பகுதியிலிருந்து கூடலூர் செல்லும் சாலை மிகவும் உருக்குலைந்த நிலையில் கிடப்பதை கண்டு அப்பகுதி பொதுமக்கள் வேதனை அளிக் கின்றனர் மேலும் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பணிபுரியும் விவசாயிகள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் விபத்து நேர்ந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து போகும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன எனவே துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக வெட்டுக்காடு, ,காஞ்சிமறை, துறை பகுதியில் சேதமடைந்து கிடக்கும் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கையாக சாலை மறியலில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.