கொசு கடித்தால் மட்டுமல்ல... உடலுறவு மூலமும் டெங்கு பரவும்: ஸ்பெயினில் அதிர்ச்சி சம்பவம்

மாட்ரிட்: டெங்கு காய்ச்சலானது கொசுக்கள் மூலமாக மட்டுமல்ல, டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் பாலியல் ரீதியிலான உறவு கொண்டாலும் பரவும் என்பது ஸ்பெயினில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. டெங்கு வைரசானது கொசுக்கள் மூலமாக மனிதனுக்கு பரவுகின்றது. ஏடிஸ் என்ற கொசுக்கள் கடிப்பதால் டெங்கு பாதிப்பு ஏற்படுகின்றது. இந்த காய்ச்சல் உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைகின்றனர்.  இந்நிலையில் டெங்கு பாதிக்கப்பட்ட ஒருவருடன் பாலியல் ரீதியிலான உறவு வைத்துக்கொள்வதாலும் டெங்கு காய்ச்சல் பரவும் என்பதை ஸ்பெயின் சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

ஸ்பெயினில் உள்ள மேட்ரிட் பகுதியைச் சேர்ந்த 41 வயது நபர், கடந்த செப்டம்பரில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு டெங்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த தனது ஆண் துணையுடன் அவர் பாலியல் ரீதியிலான உறவில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரது ஆண் துணை கியூபா மற்றும் டொமினிக் குடியரசு உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று திரும்பி இருந்தார். மருத்துவர்கள் அவரது விந்தணுவை சோதனை செய்தனர். அதில் அவருக்கு டெங்கு இருந்தது மட்டுமல்ல, கியூபாவில் பரவும் அதே வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் உடலுறவால் டெங்கு பரவும் என்பது உறுதியாகி உள்ளது


Popular posts
நியாயவிலை கடை ஊழியர்களின் அடாவடி பொதுமக்கள் வேதனை
Image
பெரியகுளம் தேவதானப்பட்டி அருள்மிகு ஸ்ரீ மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும்.
Image
திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமம் கோவிந்தம்மேடு பகுதியில் செயல்படும் முதியோர் இல்லத்தில்
Image
நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தூய்மைப் பணியாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
Image
புதுவை மாநிலம், வில்லியனூர் பகுதி சுல்தான்பேட்டையில் அமைந்துள்ள ஜம் ஜம் பழமுதிர் நிலையத்தில் மக்கள் கூட்டம் வழிந்தது
Image