நாமக்கல்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பழைய பைபாஸ் சாலையில் கந்தசாமி கண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் அருகே அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணி வரை மது விற்பனை நடைபெற்று வருகிறது சந்து கடை மூலம் சில மர்ம நபர்கள் இங்கு மது விற்பனை செய்து வருகின்றனர். இதுபற்றி பள்ளியின் மாணவர்களின் பெற்றோர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளத்தனமாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. தாபா ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் மற்றும் வாத்து கடைகள் இங்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. கவனிக்கப்பட்ட காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
குறிப்பாக கதிரொளி ரெஸ்டாரண்ட், பைபாசில் உள்ள இது நம்ம வாத்து கடை உள்ளிட்ட பல கடைகளிலும், கபிலர்மலையிலும் சரக்கு முழுநேர
விற்பனை நடைபெற்று வருகிறது.
பரமத்தி வேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் கதிரொளி ரெஸ்டாரன்ட் மட்டும் கண்டுகொள்வது இல்லை எனவும் குறிப்பிட்ட சிலரை மட்டும் உள்நோக்கத்தோடு டிஎஸ்பி கைது நடவடிக்கை எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தினசரி கதிரொளி ரெஸ்டாரண்ட் வழியாகவும், இது நம்ம வாத்துகடை அருகிலேயே உள்ள மொபைல் பேட்ரோல் காவலர்கள் உள்ளிட்டோர் யாரும் உள்ளே சென்று கண்துடைப்புக்காக ஆய்வு செய்கின்றனர்.
உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு பயந்து எந்த நடவடிக்கை எடுப்பதில்லை என டிஎஸ்பி மேல் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எம்பி சின்ராஜுக்கு பொதுமக்கள் வைக்கும் கேள்வி இதுதான். மணலை ஓடிஓடி பிடித்துக் கொடுக்கும் அவர்களுக்கு எங்கள் பத்திரிகை சார்பாக பாராட்டுக்கள்...... அதேபோல் மற்ற லாட்டரி சீட்டுகள் சந்து கடையில் மது விற்பனை ஏன் கண்டுகொள்வதில்லை. ஏனென்றால் சின்ராஜ் உறவினர்கள் நடத்துவதால் எதுமே கண்டுகொள்வதில்லைஎன கூறப்படுகிறது. குறிப்பாக தனது சமூகத்தை சேர்ந்த கதிரொளி ரெஸ்டாரன்ட் உள்ளே புகுந்து ஆய்வு செய்ய துணிச்சல் எம்பி சின்ராஜ் அவர்களுக்கு வருமா? சட்டம் தன் கடமையை செய்யுமா? அல்லது புகார் கூறுபவர்கள் மீது வழக்கு பாயுமா பொறுத்திருந்து பார்ப்போம் துணிச்சலுடன்.