பாரதி ஏர்டெல் (மற்றும் வோடபோன் ஐடியா) நிறுவனத்தின் இந்த ஆக்ரோஷமான அணுகுமுறையின் விளைவாக கடந்த மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கவலைப்படுவதாக தெரிகிறது.
ஏர்டெல் ரூ.219 திட்டத்தின் நன்மகள் & செல்லுபடியாகும் காலம்:
கடந்த வாரம் ஏர்டெல் (மற்றும் வோடாபோன்) அதன் ஆஃப்-நெட் அழைப்பிற்கான FUP வரம்பை நீக்குவதன் மூலம் ஜியோவை கடுமையாக தாக்கியது, தற்போது இரண்டாவது தாக்குதலாக ரூ.219, ரூ.399 மற்றும் ரூ.449 என்கிற மூன்று புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது!
முன்னரே கூறியபடி, ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டமானது முன்னர் அணுக கிடைத்த அதே ரூ.169 திட்டமாகும்.
நன்மைகளைப் பொறுத்தவரை, இது ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலான டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் எந்த விதமான வரம்பும் இல்லாத வரம்பற்ற குரல் அழைப்புகள் போன்றவைகளை வழங்குகிறது.
தவிர ஏர்டெல் நிறுவனத்தின் பிற நன்மைகளான இலவச ஹலோ ட்யூன்ஸ், வரம்பற்ற விங்க் ம்யூசிக் அணுகல் மற்றும் இலவச ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் சந்தா ஆகியவைவைகளையும் வழங்குகிறது. இதன் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும். மறுகையில், வோடபோன் ரூ.219 ஆனது ஏர்டெல் வழங்கும் இதே நன்மைகளையும், உடன் இலவச வோடபோன் ப்ளே உறுப்பினர் அணுகலையும் வழங்குகிறது.