மூன்று புதிய திட்டங்களின் விலை நிர்ணயங்கள்:
பார்தி ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள மூன்று புதிய ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை நிர்ணயம் ரூ.219, ரூ.399 மற்றும் ரூ.449 ஆகும்.
இந்த மூன்று திட்டங்களும் ஏற்கனவே ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. ரூ.219 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் என்பது விலை ஏற்றத்திற்கு முன்னதாக ரீசார்ஜ் செய்ய கிடைத்த அதே ரூ.169 திட்டமாகும்.
அதாவது பழைய திட்டமானது ரூ.50 என்கிற விலை உயர்வை பெற்றுள்ளது. மறுபுறம் உள்ள ரூ.399 மற்றும் ரூ.449 ஆகிய இரண்டுமே ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் பட்டியலில் சேர்ந்துள்ள புதிய திட்டங்கள் ஆகும்.
இந்த மூன்று திட்டங்கள் சார்ந்த அறிவிப்பை, பார்தி ஏர்டெல் தனது சமூக ஊடக தளங்களின் வழியாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சுவாரசியமான விடயம் என்னவென்றால் இதே திட்டங்களை வோடபோன் ஐடியாவும் அறிமுகப்படுத்தியுள்ளது. முதலில் ஏர்டெல் திட்டங்களை பற்றி காண்போம்.