இந்த பட்டியலில் இரண்டாவது இடத்திலுள்ள கார் மாருதி சுஸுகி ஆல்ட்டோ. மாருதி சுஸுகி நிறுவனத்தின் என்ட்ரி லெவல் காராகவுள்ள ஆல்ட்டோ, அறிமுகமான நாள்முதல் தற்போது வரை நல்ல விற்பனையை பதிவு செய்து வருகிறது.
கடந்தாண்டு இந்தியாவின் ஆட்டோத்துறை விற்பனை வீழ்ச்சியை சந்தித்த போதும் கூட, ஆல்ட்டோ காரின் விற்பனை பெரியளவில் சரிவை சந்திக்கவில்லை. அந்த நிலை கடந்த டிசம்பர் மாதம் வரை தொடர்ந்தது. அதன்படி, 2019 டிசம்பரில் 15,489 ஆல்ட்டோ கார்கள் நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2018ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 25,121 யூனிட்டுகளாக உள்ளன. இந்த இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும் போது 2018 டிசம்பரை விட, 2019 டிசம்பரி 38.4 சதவீதம் ஆல்ட்டோ கார்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன.