இந்தியாவில் விற்பனையாகும் ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களில் பலேனோ மாடல் முதன்மையான இடத்தில் உள்ளது.
கடந்த இந்தியாவின் சப்-காம்பேக்ட் செடான் பிரிவில் 2015ம் ஆண்டு அறிமுகமான இந்த கார் குறிப்பிட்ட ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவின் கார் ஆர்வலர்கள் பலரும் விரும்பும் இந்த மாடல், கடந்த டிசம்பர் மாதத்தில் 18,465 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2018 டிசம்பரில் மாருதி சுஸுகி பலேனோ கார் 11,315 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன. இந்த இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும் போது 2018 டிசம்பரை விட, 65.38 சதவீதம் கூடுதலாக 2019 டிசம்பரில் மாருதி பலேனோ கார் விற்பனையாகியுள்ளது.